
பொழுதுபோக்கு
என்ன மன்னிச்சிடுங்க! – நடிகர் பார்த்திபன் உருக்கம்;;
ஒத்த செருப்பு படத்தில் நடித்திருந்த பார்த்திபனின் படமானது தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது.
இந்நிலையில் தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில் ஜூலை 15-ஆம் தேதி வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சூழலில் brigada என்பவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே இவர் சேரி குறித்து வெளியிட்ட கருத்து சமூக வலைதளங்களில் கடும் கண்டணத்திற்குள்ளானது. இதற்கு brigada மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இயக்குனர் பார்த்திபனும் மன்னிப்பு கோரியுள்ளார். குறிப்பாக brigada-வின் கருத்தால் மனக்காயம் அடைந்தவர்களிடன் தானும் மன்னுப்பு கேட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
