Connect with us

மனசாட்சி இருந்தால் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்..!!

modi

செய்திகள்

மனசாட்சி இருந்தால் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடி மீது குற்றம் சாட்டி வரும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமருக்கு எதிராக குற்றம் சாட்டியவர்கள் மனசாட்சி இருந்தால் தாங்களாகவே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி தொடர்பில் இல்லை என உச்சநீதிமன்றம் நேற்றையதினம் தீர்ப்பளித்தது என்று அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார். அரசு சாரா நிறுவனங்களும், அரசியல் உள்நோக்கம் கொண்ட சில பத்திரிக்கையாளர்களும் தான் பாஜக மீது தொடர்ந்து புகார் தெரிவித்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மோடி ஆஜரானபோது அவருக்கு ஆதரவாக யாரும் போராட்டம் நடத்தவில்லை என்றும் அமித்ஷா கூறினார். 19 ஆண்டுகளாக மிகுந்த வலிமையுடன் போராடி தற்போது வெற்றி பெற்றுள்ளார் பிரதமர் மோடி என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார். இது அரசியல் வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top