பாஜக தவிர 12 கட்சிகளும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு!: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்று காலை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அதிமுக, பாஜக, பாமக, காங்கிரஸ் போன்ற பல கட்சியினர் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் சென்னை தமிழகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நீட் மசோதா விளக்காக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கூடப்பட்டது.

சுப்பிரமணியன்

இது குறித்து தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டரீதியாக போராட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

மூத்த சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நீட் விலக்கு பற்றிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின்னர் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்தார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது பேரவை மாண்பை சிதைப்பதாக உள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக தவிர மற்றபடி 12 கட்சிகளும் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். தமிழக ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சரை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment