திரைப்படங்களின் மூலம் பக்தி பரப்பிய ஏ.பி. நாகராஜன்

108b4bfa29b937137a2c034843eaf6b0

நாம் தினமும் ஆன்மிக இணையதளங்கள் பலவற்றை பார்வை இடுகிறோம். விநாயகர், சிவன், பிரம்மன், முருகன் என பலரை பற்றி தெரிந்து கொள்கிறோம் பல புராணக்கதைகள் பலவற்றை படிக்கிறோம் ஆனால் முதன் முதலில் புராணம் என்றால் இதுதான் இப்படித்தான் இருக்கும் என விஷுவலாக தெளிவாக மக்கள் மனதில் புரிய வைத்தவர் திரு .ஏ.பி நாகராஜன் தான்.

அவர் இயக்கிய திருவிளையாடல் படத்தை வைத்துதான் திருவிளையாடல் புராணம் என்றால் இதுதான் என்று பலருக்கும் தெரிந்து கொள்ள முடிகிறது. சிலர் புத்தகங்கள் படிப்பதை விட இது போல திரைப்படங்களில் விஷுவலாக சொல்லப்படுவதைத்தான் விரும்புவார்கள் அப்படியாக சினிமாவில் பல அற்புத பக்திப்படங்களை இயக்கி மக்களை பக்தி நெறிக்கு தூண்டியவர் திரு.ஏ.பி நாகராஜன். திருவிளையாடல் படத்தில் நக்கீரராக இவர் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சரஸ்வதி சபதம், காரைக்கால் அம்மையார், கந்தன் கருணை, திருமலை தென் குமரி, வா ராஜா வா, அகத்தியர் என பல பக்தி சார்ந்த படங்களை இயக்கி மக்களின் அபிமானம் பெற்றவர். மேற்கண்ட படங்களின் மூலம் முருகன் என்றால் இப்படித்தான் சரஸ்வதி என்றால் இப்படித்தான் அகத்தியர் என்றால் இப்படித்தான் என தெளிவாக அவர்களின் பக்தி வரலாற்றை விளக்கியவர்.

இவரால் பலருக்கும் புராண ரீதியாக ஆன்மிக ரீதியான நம்பிக்கை பிறந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

சிறந்த பக்தி படங்களை தயாரித்து மக்களை ஆன்மிக வழிக்கு தூண்டிய ஏ.பி நாகராஜன் அவர்கள் இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் அவர் தயாரித்த பல பக்திப்படங்கள் நம்மை ஆன்மிக ரீதியான பலவற்றை அறிந்து தெரிந்து கொள்ள உதவியது என்றால் மிகையில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.