தேவையற்ற பயம் உள்ளவரா- இந்த பதிகம் படியுங்க

cb87919409c47e509e47ebd34b474e9e

இப்பாடல் சென்னை அருகேயுள்ள திருப்போரூர் முருகன் கோவில் குறித்த பாடலாகும். இந்த பாடலை பாடி வந்தால்  பயம் நீங்கும் என்பது ஐதீகம்

குமரா நம என்று கூறினார் ஓர்கால்
அமராவதி ஆள்வர் அன்றி -யமராஜன்
கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாய் உதரப்
பைபுகுதார் சேரார் பயம்.
பொருள்:
“குமராயநம’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை, ஒருமுறை பக்தியுடன் ஓதுபவர்கள், தேவர்கள் வாழும் அமராவதி நகரத்தில்
வாழும் பேறு பெறுவர். உயிர்களைப் பறிக்கும் எமனின் கையில் அகப்பட்டு அடையும் துன்பம் வராது. இவர்கள் போரூரில் அருள்செய்யும் முருகப் பெருமானின் திருவடியில் தங்கிஇருப்பர். இனி எந்த தாயின் வயிற்றிலும் பிறவி எடுக்க மாட்டார்கள். அவர்களை பயம் அணுகவே அணுகாது.
சென்னை அருகிலுள்ள போரூர் முருகன் குறித்த பாடல் இது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.