பூஸ்டர் டோஸ்க்கு எந்த தடுப்பூசியை செலுத்தலாம்? மத்திய அரசு விளக்கம்;

நம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதுவரை இரண்டு விதமான தடுப்பூசிகள் மக்கள் அனைவருக்கும் போடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று கோவிசில்டு மற்றொன்று கோவாக்சின். இந்த இரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி

இவ்வாறுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி பற்றி அதிகளவு பேசப்பட்டு வருகிறது. பல நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பூஸ்டர் தடுப்பூசியை  வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளவர்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் பல தரப்பினர் பரிந்துரைத்து வந்தனர்.

ஆனால் பலருக்கு பூஸ்டர் டோஸ்க்கு எந்த தடுப்பூசி என்ற குழப்பத்தில் காணப்படுகின்றனர். அவர்களுக்காக மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி முதல் இரண்டு தவணை டோஸ் கோவாக்சின் எனில் அதையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

முதல் இரண்டு தவணை டோஸ் கோவிஷீல்டு எனில் அதையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment