Connect with us

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள்-அறிவிப்பாரா நிர்மலா?

nirmala sitharaman 07 1504778778

செய்திகள்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள்-அறிவிப்பாரா நிர்மலா?

நம் இந்தியாவில் தற்போது மத்திய நிதி அமைச்சராக உள்ளார் நிர்மலா சீதாராமன். இவர் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை இவரையே சேரும். இந்த நிலையில் இவர் தலைமையில் இன்றைய தினம் கூட்டம் ஒன்றுகூட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டாவது நாள் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்றைய தினம் கூடுகிறது. வரி அடுக்குகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஜிஎஸ்டி வரி கட்டமைப்பை திருத்துவது, ஆன்லைனில் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்றைய தினம் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top