மலேசியாவின் புதிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தேர்வு

மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ரஹிம் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் மாலை 5 மணியளவில் மலேசியா மன்னர் மாளிகையில் அன்வர் இப்ரஹிம் பதவியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிரெதிர் கட்சிகாளாக மோதிய கட்சிகள் ஒரே ஆட்சியில் கூட்டாளிகளாக ஆட்சிநடத்தப்போவது ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய அம்சமாகும்.

அதே போல் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அன்வர் இப்ரஹிம் பிரதமர் பதவிகளுக்காக முயற்சி செய்து வந்ததாகவும், கடந்த முறை ஆட்சி குழப்பங்களால் பிரதமர் ஆகமுடியவில்லை என தெரிகிறது.

மேலும், கடந்த வாரம் சனிக்கிழமை நடைப்பெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மலேசிய மன்னர் எடுத்த முயற்சியில் தற்போது அன்வர் இப்ரஹிம் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமிழர்களுக்கு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.