அடேங்கப்பா!.. அனுஷ்காவுக்கு திருமணமா?.. அந்த தயாரிப்பாளரை கல்யாணம் பண்ணப் போறாரா?.. வைரலாகும் தகவல்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி 2 படம் வரை இருந்த மவுசு அதன் பின்னர் காணாமல் போனது. பிரபாஸை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், இன்னமும் அனுஷ்காவுக்கும் திருமணம் ஆகவில்லை. பிரபாசுக்கும் அது நடக்கவில்லை.

அனுஷ்காவுக்கு திருமணமா?:

நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிக்க தன் எடையை அதிகரித்து நடித்தும் அவர் எதிர்ப்பார்த்த அளவிற்கு அப்படம் வரவேற்பை பெறவில்லை. மேலும், அவரின் உடல் எடைக் காரணமாக பல பட வாய்ப்புகளை இழந்தார். அதை தொடர்ந்து மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். பலரும் அனுஷ்காவின் திருமணத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவரின் திருமணம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள அனுஷ்கா தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் சூப்பர் படத்தில் நடித்து திரைதுறையில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் மாதவனுடன் ரெண்டு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டார். ஒரு சாதரன நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்த அனுஷ்கா அருந்ததி படத்தில் தன் முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றார். அப்படம் ஃப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வசூலை அள்ளியது.
பிறகு அனுஷ்காவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. தான் தேர்தெடுக்கும் எந்த கதையாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் நடித்து வந்தார். சிங்கம், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார்.

மேலும், இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து உலகளவில் பிரபலமானார். அப்படத்தில் அவர் நடித்திருந்த காதாப்பாத்திரமான தேவசேனாவாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மலயாளத்தில் கால் பதிக்க உள்ள அனுஷ்கா ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கவிருக்கும் காத்தனார் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பெற்ற வரவேற்பை மலையாளத்திலும் பெறுவாரா என்பதை ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அனுஷ்கா தன் திருமணத்தை பற்றி செய்தியாளர்களிடம் பேசியிருந்தபோது, திருமணம் அற்புதமானது எனக்கு பிடித்த ஒருவரை தேர்தெடுத்து கண்டிப்பாக திருமணம் செய்துக்கொள்வேன், அது எப்போழுது நடக்கும் என தெரியவில்லை அதுவரைக்கும் நல்ல கதைகளை தேர்தெடுத்து முழு கவனத்துடன் நடித்து வருவேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது 42 வயதில் கர்நாடக திரைத்துறையை சேர்ந்த பிரபல தயாரிப்பாளரை நடிகை அனுஷ்கா திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...