அனுஷ்காவுக்கும் வரலாற்று படங்களுக்கும் அவ்வளவு பொருத்தம் ஏற்கனவே அவர் நடித்த அருந்ததி படத்தில் இருந்து பாகுபலி, ருத்ரமா தேவி என பல படங்களில் சரித்திர புகழ் வாய்ந்த வேடங்களையே ஏற்றுள்ளார். அதனால் இது போல வேடங்களுக்கு அனுஷ்காவையே தொடர்ந்து அழைப்பர்.

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் அய்யப்பனின் வரலாற்றை மிக பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் சொல்லும் வகையில் அய்யப்பன் சரித்திரத்தை படமாக்குகிறார்.
இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இந்த படத்தில், நடிகை அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.