Connect with us

அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி! 13 வருடங்களை கடந்ததால் அனுஷ்கா பெருமிதம்!

arundhathi

பொழுதுபோக்கு

அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி! 13 வருடங்களை கடந்ததால் அனுஷ்கா பெருமிதம்!

அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி! 13 வருடங்களை கடந்ததால் அனுஷ்கா பெருமிதம்!

ஏதாவது ஒரு சில தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டு கடுமையான வரவேற்பை பெறுவது வழக்கம்.

பெரும்பாலும் கோடி ராமகிருஷ்ணா இயக்கிய வைஜெயந்தி ஐபிஎஸ், அம்மன், அருந்ததி , போலீஸ் லாக்கப் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம் கோடி ராமகிருஷ்ணா இயக்கி தமிழில் வெற்றி பெற்ற படங்கள் எல்லாமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களாகும்.

அந்த வகையில் கடந்த 2009 பொங்கலுக்கு ரிலீஸ் ஆன திரைப்படம்தான் அருந்ததி. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா, மனோரமா, சாயாஜி சிண்டே போன்றோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் கதாநாயகி அனுஷ்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் இயக்கப்பட்டிருந்தது படமும் பெரிய வெற்றி பெற்றது.

13 வருடங்கள் ஆகி விட்டது எந்த ஒரு நடிகைக்கும் வாழ்நாளில் ஒருமுறைதான் இது போல கதாபாத்திரம் அமையும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

அருந்ததி அமானுஷ்யம் கலந்த படமாக கடந்த 2009ல் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top