விஜய் ஆண்டனி ‘கொலை’ : இணையத்தில் மாஸ் காட்டும் டிரைலர்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜர் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன், கோடியில் ஒருவன், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் மாஸ் காட்டிய ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் படமாக உருவாகிய கொலை படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சமீபத்தில் குறை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை சில தினங்களுக்கு முன் அறிவித்து இருந்தனர்.

அந்தவகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மேலும் மர்மமான முறையில் கொலை நடந்திருப்பதாகவும் கொலை செய்தது யார் என்பது குறித்து படத்தின் மையக் கதை அமைந்து இருப்பதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment