தமிழர் விரோத கட்சிகள் இந்த தேர்தல் மட்டுமல்லாது எல்லாத் தேர்தலில் தோற்க்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தல் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டு ஊடகங்களை தாண்டி வட மாநிலங்களும் பாராட்டும் ஆட்சியாக தி.மு.க திகழ்வதாக கூறினார்.
மேலும் நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிராக வெளிநடப்பு செய்ததின் மூலமாக பாஜக தமிழ்நாட்டில் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இத்தகைய தமிழ்நாடு விரோத சக்திகள் இந்த தேர்தலில் மட்டுமல்ல எல்லா தேர்தலிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அதோடு தமிழர்களின் நாட்டுபற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி சான்றிதல் அளிக்க தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.