Connect with us

இன்று காலை சரியாக 10:30 மணிக்கு; அனைத்து பள்ளிகளிலும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி!!

narcotics

தமிழகம்

இன்று காலை சரியாக 10:30 மணிக்கு; அனைத்து பள்ளிகளிலும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி!!

நம் தமிழகத்தில் போதை பொருள்களின் நடமாட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது. மேலும் போதைப் பொருட்களை மையமாகக் கொண்டு தமிழகத்தில் சினிமாக்களும் அடுத்தடுத்து வந்து கொண்டே உள்ளன.

இந்த போதை பொருட்களானது தற்போது பள்ளி மாணவர்கள் கையிலும் நடமாடுவது மிகுந்த வேதனையான நிகழ்வாக காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் பள்ளிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று காலை 10:30 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க உள்ளனர்.

பள்ளிகளில் காலை முதல் 19ஆம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வை கடைபிடிக்கவும் கல்விக் கல்வி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் உபயோகிக்கும் போதைப் பொருள்களின் விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது போல் இந்த உறுதிமொழி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த உறுதிமொழியை ஏற்று போதைக்கு அடிமையான மாணவர்கள் மறுவாழ்வு பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top