Connect with us

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!!

education department

தமிழகம்

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் இளைய சமுதாயம் போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது என்ற விதத்தில் ஆகஸ்ட் 12 முதல் 19-ம் தேதி வரையில் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாளை காலை 10:30 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்தகைய நடைமுறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளது.

அதேபோல் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கல்வி தொலைக்காட்சியிலும் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்றைய தினத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top