Connect with us

காலையிலேயே அதிரடி!! முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!!!

லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழகம்

காலையிலேயே அதிரடி!! முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!!!

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து அதிமுகவின் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மற்றுமொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை செய்து கொண்டு வருகின்றனர். அதன்படி நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

நாமக்கல், மதுரை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 24 இடங்களிலும், மதுரையில் ஒரு இடம், திருப்பூரில் ஒரு இடம் என சோதனை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்துக் குவித்து வைத்துள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 4.72 கோடி சொத்து சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தனது பெயரிலும், தனது மனைவி ,பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top