போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!! வாகனத்திலிருந்த 28.35 லட்சம் பறிமுதல்;
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பத்து மாதங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் வருமான துறையினரின் சோதனை அதிரடியாக நடைபெற்றது.
குறிப்பாக முதலில் எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர்கள் இல்லங்கள் அலுவலகங்களில் அதிதீவிரமாக வருமானம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அரசு அலுவலங்களிலும் அவ்வப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
அந்த வகையில் தற்போது போக்குவரத்து துறை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் ரூபாய் 28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை போக்குவரத்து துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்துள்ளது. கோயம்புத்தூர் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
டிஎஸ்பி திவ்யா தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி வாகனத்தில் இருந்து ரூ 28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
