வாரம் ஒரு வைரஸ் போய், தினமும் ஒரு வைரஸ் வரும் போலயே.. இங்கிலாந்தில் ஒமிக்ரானின் மற்றுமொரு மாறுபாடு கண்டுபிடிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுடன் நாம் பயணிக்க ஆரம்பித்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கொரோனாத் தொற்றில் இருந்து மீள்வதற்குள் நாம் ஒமிக்ரான், புளோரோனா எனப் பல வகையான வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறோம்.
கொரோனாவில் இருந்து உருமாறிய வைரஸான ஒமிக்ரான் முதன் முதலாக தென் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புளோரோனா வைரஸ் இஸ்ரேலில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இஸ்ரேலைத் தொடர்ந்து மெக்சிகோவிலும் புளோரோனாத் தொற்றுகள் கண்டறிப்பட்ட நிலையில், மற்றொரு புறம் ஒமிக்ரான் வைரசின் துணை திரிபான பிஏ-1 வைரஸ் விறுவிறுவென பரவி வருகிறது.
மேலும் உலக சுகாதார அமைப்பின் சமீபத்தைய அறிக்கையில் ஒமிக்ரான் மொத்தமாக மூன்று துணை திரிபுகளாக பிஏ-1, பிஏ-2 மற்றும் பிஏ-3 என்று வரிசைப்படுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி பிஏ-1 வைரஸ் ஓரளவு பரவிய நிலையில் ஒமிக்ரானின் மற்றொரு துணை மாறுபாடான பிஏ-2 வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிஏ-2 வைரஸ் டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடனில் உச்சம் எடுத்துப் பரவி உள்ளது.
அடுத்து பிஏ-2 வைரஸ் பிரான்ஸ் மற்றும் இந்தியாவினை நோக்கி படையெடுக்கும் என்றும், அத்துடன் பிஏ-3 துணை திரிபும் விரைவில் கண்டறியப்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
