இந்தியாவை குறிவைக்கும் மற்றொரு வகை கொரோனா வைரஸ்! 17 பேர் பாதிப்பு!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெரும் அச்சத்தை உருவாக்கிய கொரோனா தற்போது இந்தியா கட்டுப்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளும் நாள்தோறும் போட்டுக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கொரோனா
 

இவ்வாறு இந்தியா மீண்டு வந்தது தனது மக்களுக்கு மிகுந்த சந்தோசத்தை அளிப்பதாக காணப்பட்டாலும் தற்போது இந்தியாவிற்கு பெரும் அச்சத்தை உருவாக்கும் மற்றும் ஒரு வைரஸ் உருவாகியுள்ளது .

அதன்படி அவை கொரோனா AY4.2 என்ற வகையினை சார்ந்ததாக காணப்படுகிறது. இந்த AY4.2 வைரஸ் மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆக காணப்படுகிறது. இது ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது.

புதிய உருமாறிய டெல்டா வகை வைரஸ் ஆன AY4.2 பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பரவியதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் கூறியுள்ளது. இந்த AY4.2 வைரஸ் அதிகமாக பரவக்கூடிய இதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு.

இருப்பினும் ஆல்பா மற்றும் டெல்டா வகை போன்று பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும் கூறியுள்ளது. இவ்வாறு இருந்தாலும் தற்போது இந்தியாவில் இது 17 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment