தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலர் சமீபகாலமாக கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நடிகர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் சிலரும், சில இயக்குனர்களும் சமீப காலமாக கொரோன தொற்று, மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நகைச்சுவை நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கேரக்டரில் நடித்தவரும் அதன்பின்னர் பல படங்களில் நடித்தவருமான மாறன் தற்போது சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சற்று முன்னர் வெளியான தகவலின்படி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
கொரோனா உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக திரையுலகினர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது