Connect with us

சோகத்திலும் ஒரு உற்சாகம்; தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! நாளை வெளியாகிறது மற்றொரு பாடல்!!

மாறன்

பொழுதுபோக்கு

சோகத்திலும் ஒரு உற்சாகம்; தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! நாளை வெளியாகிறது மற்றொரு பாடல்!!

சோகத்திலும் ஒரு உற்சாகம்; தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! நாளை வெளியாகிறது மற்றொரு பாடல்!!

சினிமா துறையில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக முன்னணி நட்சத்திரங்கள் வரிசையாக விவாகரத்து செய்துகொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவையே மிகவும் உலுக்கும் செயலாக காணப்படுகிறது தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம்தான். தனது காதல் மனைவியான‌ ஐஸ்வர்யாவை பிரிய போவதாக தனுஷ் கூறியிருந்தார்.

இதுகுறித்து நாள்தோறும் இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இருப்பினும் தனுஷ் தனது வேலையில் அதிதீவிர காட்டிக் கொண்டு வருகிறார்.

மாறன் திரைப்படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. முதல் பாடலான பொல்லாத உலகம் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது. அதேபோல் நேற்றைய தினம் படப்பிடிப்பின் போது நடிகை உடன் தனுஷ் உணவருந்தும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கின்ற மாறன் திரைப்படத்தின் மற்றுமொரு பாடல் நாளையதினம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்தடுத்து தனுஷ் படத்தின் அப்டேட்கள் வெளியாவதால் தனுஷின் ரசிகர்கள் சந்தோஷத்தோடு காத்துக் கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top