பளு தூக்குதலில் வலு காட்டும் இந்தியா! மற்றொரு வீராங்கனை வெள்ளி பதக்கம்;

நேற்றைய தினம் முதல் இந்தியாவிற்கு தொடர்ந்து காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் கிடைத்துக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இதுவரை இந்தியா இரண்டு தங்கம் மற்றும் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இன்றைய தினம் இந்திய வீராங்கனை ஒருவர் பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

அவரை தொடர்ந்து மற்றும் ஒரு வீராங்கனை வெள்ளி பதக்கம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவின் பிந்திய ராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

மகளிர் 55 கிலோ எடை பிரிவில் மொத்தம் 22 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார் வீராங்கனை பிந்தியா ராணி. இதனால் இந்தியாவிற்கு இதோடு ஆறாவது பதக்கங்கள் கிடைத்துள்ளது.

மேலும் பளு தூக்குதல் பிரிவில் தான் இந்தியா தொடர்ந்து தங்கம் வெள்ளிப் பதக்கங்களை வென்று கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.