அடுத்தடுத்து சிக்கும் ராஜேந்திர பாலாஜி! சத்துணவில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக மற்றுமொரு புகார்!!

கடந்த சில நாட்களாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமான வரி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடைபெற்று வந்தன. இதில் ஏராளமான கணக்கில் காட்டாத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

rajendrabalaji013 1607335586 1615436357 1617533497

அதோடு கடந்த வாரம் தொடங்கி தற்போது வரை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றியே ஊடகங்களில் அதிகமாகப் பேசப்படுகின்றன. இந்த நிலையில் அவர் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடிக்கும் அதிகமாக பணமோசடி செய்துள்ளார்.

தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளார். அவரை தேட 8 தனிப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு பணமோசடி புகார் ராஜேந்திர பாலாஜி மீது கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 10 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ராஜேந்திரபாலாஜி கடல் வழியாக தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக கண்காணிப்பு தீவிரம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment