Connect with us

எல்லாருக்கும் ஆண்டு இறுதித்தேர்வு! வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்!!

202201120450192034 For 10th and 12th grade students Diversion as planned Exam SECVPF

தமிழகம்

எல்லாருக்கும் ஆண்டு இறுதித்தேர்வு! வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்!!

எல்லாருக்கும் ஆண்டு இறுதித்தேர்வு! வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்!!

நம் தமிழகத்தில் மே இரண்டாம் தேதி முதல் மே மாத இறுதி வரை 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறாது என்று வதந்திகள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடைபெறும் என்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு தேர்வு உறுதியாக நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

இதனால் மாணவர்கள் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.

அரசு சார்பில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார் .அதே நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட போராட்டம் தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top