பர்ஸ் காணவில்லை என்ற ஆத்திரத்தில் டூவீலருக்கு தீ வைத்த நபரால் ஏற்பட்ட விபரீதம்..!

தன்னுடைய பர்ஸ் மற்றும் வாட்ச் ஆகியவை காணாமல் போய்விட்டதை அடுத்து ஆத்திரத்தில் டூவீலருக்கு தீ வைத்த 51 வயது நபரால் ஏற்பட்ட விபரீதம் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த 51 வயதை நபர் ராமச்சந்திரன் என்பவர் தனது பர்ஸ் மற்றும் வாட்ச் தொலைத்துவிட்டார். அவை இரண்டும் தனக்கு மிகவும் நெருக்கமானது என்றும் தனக்கு நெருக்கமான ஒருவர் பரிசாக கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பர்ஸ் மற்றும் வாட்ச் ஆகிய இரண்டும் காணாமல் போனதை அடுத்து பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டு இருக்கிறார். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் தான் அவருடைய பர்ஸ் மற்றும் வாட்சை எடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து குடிபோதையில் இருந்த அவர் பர்ஸ் மற்றும் வாட்ச் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்து தன்னுடைய டூவீலருக்கு தீ வைத்தார். இதனால் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல டூவீலர்களில் தீ பரவிவிட்டது. அதன் காரணமாக 16 டூவீலர்கள் தீயில் கருகி விட்டதாகவும் அதுமட்டுமின்றி மேலும் சில வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிகிறது..

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் விரைந்து வந்து ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பர்ஸ் மற்றும் வாட்ச் காணாமல் போனதால் ஆத்திரத்தில் டூவீலரை தீவைத்தேன் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சாதாரண பர்ஸ் மற்றும் வாட்ச் காணவில்லை என்பதற்காக அவர் வைத்த தீ சுமார் 20 வாகனங்களை எரித்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.