தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு: மொத்தமே இரண்டு மணி நேரம்தான்!

தீபாவளி என்றால் பலரின் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும்.அன்றைய தினம் அதிகாலமே எழுந்து புத்தாடை அணிந்து பலரும் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அதிலும் முக்கியமாக பட்டாசுகள் வெடிப்பது தீபாவளியின் மிகப் பெரிய சிறப்பாகும்.பட்டாசு

இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே காலையில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.இதனால் தமிழகத்தில் தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது.ஏற்கனவே இது போன்று சென்னை மாநகரத்தில் அறிவிப்பு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment