2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது: எழுத்தாளர் அம்பைக்கு அறிவிப்பு!

இன்றைய காலகட்டத்தில் எழுத்தாளர்கள் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் புத்தகங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. ஆனால் முன்னொரு காலத்தில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை நம் தமிழகத்தில் அதிகமாக காணப்பட்டது.

அந்த எழுத்தாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் எழுத்தாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உயரிய விருதாக காணப்படுகிறது சாகித்ய  அகாடமி விருது. இத்தகைய விருது தற்போது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி சிறுகதை எழுத்தாளர் அம்பை (சி.எஸ். லட்சுமி) 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது வழங்கப்பட உள்ளன. “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதைக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.

வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயன்படாத பாதைகள் போன்ற பல புத்தகங்களை எழுத்தாளர் அம்பை எழுதியுள்ளார். தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான 1960ஆம் ஆண்டில் இருந்து எழுதி வருகிறார். இத்தகைய உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் எழுத்தாளர் அம்பை தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment