Connect with us

மூன்றாண்டுக்கு பின்பு முதல் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!!

நடிகர் சங்கம்

பொழுதுபோக்கு

மூன்றாண்டுக்கு பின்பு முதல் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!!

மூன்றாண்டுக்கு பின்பு முதல் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

இதனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தலைவராக உள்ளார் நடிகர் நாசர்.

மேலும் பொது செயலாளராக நடிகர் விஷால் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. துணைத் தலைவராக நடிகர் கருணாஸ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொருளாளராக நடிகர் கார்த்தி காணப்படுகிறார்.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தேர்தல் வெற்றிக்குப் பின்பு முதல் நடிகர் சங்க பொதுக்கூட்டம் மே மாதம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மே 8ஆம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. நடிகர் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் மே 8ஆம் தேதி சென்னை சாந்தோம் பள்ளியில் நடக்கிறது. 3 ஆண்டுக்கு பிறகு மீண்டும் பதவிக்கு வந்து இருக்கும் நடிகர் நாசர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top