2022-23 ஆம் நிதியாண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிப்பு! குடிநீருக்காக 60 ஆயிரம் கோடியில் சிறப்பு திட்டம்!!
நாடாளுமன்றத்தில் இன்று காலை சுமார் 11 மணிக்கு 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மேக் இன் இந்தியா தயாரிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட லேப்டாப் மூலமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதில் வேளாண்மை, இயற்கை விவசாயம், ரயில்வே, டிஜிட்டல் கரன்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியானது. அதோடு மட்டுமில்லாமல் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து கிடைத்தன.
இந்த நிலையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் அங்கன்வாடி தரம் உயர்த்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி திட்டத்துக்கு ரூபாய் 60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூபாய் 60 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். நடுத்தர மக்களின் வீட்டு வசதி தேவைகளை பூர்த்தி செய்ய புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
