Connect with us

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு! என்னென்ன நாட்களில் என்னென்ன ஏற்பாடுகள்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு! என்னென்ன நாட்களில் என்னென்ன ஏற்பாடுகள்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு! என்னென்ன நாட்களில் என்னென்ன ஏற்பாடுகள்?

அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க பலரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தங்களது கருத்தினை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இவையெல்லாம் தாண்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறினார். இருபத்தி ஒரு மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் நாளை மறுநாள் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு அளிக்க இறுதி நாளாகும். பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெற இறுதி நாளாகும்.

பிப்ரவரி 22ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் மார்ச் 2-ஆம் தேதி முதல் பொறுப்பேற்க படுவார்கள். மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும்.

அதன்படி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாலாம் தேதி நடைபெறும். நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 80 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜனவரி 31-ம் தேதி வரை பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்த கூடாது என்றும் மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top