எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!

2020ஆம் ஆண்டு பொது முடக்கத்திற்கு பின்னர் தான் தமிழகத்தில் பள்ளிகள் முறையாக திறக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் குழந்தைகளுக்கு ஆல் பாஸ் முறையில் கடந்த ஆண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு 12 வகுப்பு மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பொதுத்தேர்வு வைக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  தள்ளிவைக்கப்பட்டு போன பொதுத்தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment