இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும். அவை பெரும்பாலும் ஆண்டின் முதல் மாதத்திலேயே ஆரம்பித்து விடும். அந்த படி 2022ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல கடன்கள், நிதி நிலைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment