தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு! அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும்!!: ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்தினை மாநில பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு சென்னை ஹைகோர்ட் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒன்றும் தேசியகீதம் கிடையாது என்று கூறியது. அதனால் எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயம் ஒன்றுமில்லை என்றும் கூறியது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் என பலவற்றிலும் முதலாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடிய பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீராரும் கடலுடுத்த என்ற மனோன்மணியம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் படிக்கும்போது அனைவரும் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் எழுந்து நிற்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை இசைக் கருவிகளோடு படிப்பதை தவிர்த்து விட்டு பயிற்சி பெற்றவர்களால் வெறும் வாய்ப் பாட்டாக பாட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment