ஏப்ரல் 6-ஆம் தேதி நம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் மே இரண்டாம் தேதி வெளியிடப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பல வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்தது.
அதன் முதற்கட்டமாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி 12, 13 ஆகிய 2 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தவும் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.