ஆன்லைன் எக்ஸாம் கிடையாது! அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் 1.5 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதிலும் கடந்த ஆண்டு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் ஆன்லைன் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அனைத்து விதமான கல்லூரிகளில் நேரடி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டன.

இதனால் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது.

அதன்படி பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிஇ, பிடெக் போன்ற ஜனவரி 21-ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது.

எனவே மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உருவாகியது. எம்இ, எம்டெக் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 26-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாத இறுதி வரை நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment