Connect with us

சூடு பிடித்த உள்ளாட்சித் தேர்தல்; அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு!

அதிமுக

தமிழகம்

சூடு பிடித்த உள்ளாட்சித் தேர்தல்; அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு!

சூடு பிடித்த உள்ளாட்சித் தேர்தல்; அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு!

நம் தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தின் வலிமையான எதிர்க்கட்சியான அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனை கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதன் முதற்கட்டமாக கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு மற்றும் விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக மாவட்ட வாரியாக அறிவித்துள்ளது.

அதன்படி கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளிலும், சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட உள்ளது. நெல்லிகுப்பம் நகராட்சியில் இருபத்தி ஒன்பது வார்டுகளிலும், பண்ருட்டி நகராட்சியில் 30 வார்டுகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட உள்ளது.

விருதாச்சலத்தில் 33 வார்டுகளில், திட்டக்குடியில் 24 வார்டுகளில் அதிமுக போட்டியிட உள்ளது. அதேபோல் விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளிலும், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிட உள்ளது. தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகளிலும் வேட்பாளர்களை களம் இறங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top