ஏற்கனவே 12 இப்போ எக்ஸ்ட்ரா 7 வணிகவரி கோட்டங்கள் அறிவிப்பு!

நாளுக்கு நாள் தமிழக அரசு புதிய அரசாணைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மேலும் ஏழு இடங்களில் புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியாகியுள்ளது.வணிகவரி நிர்வாக கோட்டங்கள்

தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே வணிகவரித் துறையில் 12 நிர்வாகங்கள் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஓசூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய 7 இடங்களில் வணிகவரி கோட்டங்கள் அமைக்கப்படுகிறது. வணிகவரித்துறை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் புதிதாக 7 நிர்வாக கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் ஒரு கோட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய இடங்கள் மற்றொரு கோட்ட அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவிக்கையில் வெளியாகியுள்ளது.

அதிக வணிக வரி செலுத்துபவர்கள் கோட்டங்களில் வணிக வரி செலுத்த ஏதுவாக இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment