Connect with us

13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவிப்பு! அண்டை மாநில அரசு அறிவிப்பு

andra pradesh

செய்திகள்

13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவிப்பு! அண்டை மாநில அரசு அறிவிப்பு

13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவிப்பு! அண்டை மாநில அரசு அறிவிப்பு

முன்பெல்லாம் மொழி கலாச்சாரத்தின் அடிப்படையில் தான் பாகுபாடு பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் இன்றோ மாவட்டங்களுக்கு உள்ளேயே ஊர் பெயரை சொல்லி பிரித்துப் பேசும் அளவிற்கு பிரிவினை அதிகம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மாநிலங்கள், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. அதிலும் நம் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இருந்து தற்போது முப்பத்தி எட்டு உருமாறியுள்ளது. இன்றைய தினம் குடியரசு தினத்திலும் கூட தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஆந்திராவில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து ஆந்திரா மாநில அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. 26 புதிய மாவட்டங்கள் உருவாக்கம், ஆன்லைன் மூலம் மாநில அமைச்சரவை அலங்கரிக்கப்பட்டு இன்று அரசாணை வெளியிடப்பட்டது.

பாலாஜி, அன்னமய்யா, அல்லூரி, என்.டி.ஆர், சத்ய சாய் என்ற பெயர்களில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கலாச்சார நிலைமைகள், வசதிகளின் அடிப்படையில் புதிய மாவட்டங்களில் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அம்மாநில அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இருப்பினும் ஆந்திராவில் வாழும் மக்களுக்கு இவை சந்தோசம் அளிப்பதாகவே காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top