சரத்குமார் நடிக்கும் வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு!

4c87015a993470cd6e8dde195bc1165b

திரை உலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் கூட தற்போது வெப்தொடர்களில் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் சூர்யா கூட ஒரு தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

நடிகர்கள் போல் முன்னணி இயக்குனர்களும் வெப்தொடர் படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெப்தொடரில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார். ஆனால் இவர் நடிக்க இருப்பது தெலுங்கு வெப்த்டொஅர் என்பது குறிப்பிடத்தக்கது 

4a0b04aba7540fdd1f63a3b84023349e

’கார்ஷானா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தெலுங்கு வெப்தொடர் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த தொடரில் சரத்குமார் மற்றும் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்தத் தொடரில் கஸ்தூரி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த தொடரின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த வெப்தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. வெப்தொடரில் சரத்குமார் நடித்த உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தொடர் தமிழிலும் டப் செய்யப்படும் என்று கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.