Connect with us

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ‘புதிய பாடத்திட்டம்’ வெளியீடு;

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகம்

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ‘புதிய பாடத்திட்டம்’ வெளியீடு;

நம் தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களை விட சற்று குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும் அண்ணா பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

அதில் தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

இதன் முதற்கட்டமாக நடப்பாண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

முதல் மூன்று செமஸ்டர்களுக்கு தமிழ் மரபு, அறிவியல் தமிழ், ப்ரொபஷனல் டெவலப்மெண்ட் ஆகிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் English lab, communication lab/ foreign language ஆகிய பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top