பல ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது நீட் தேர்வு. நம் தமிழகத்தில் நீட் தேர்வின் காரணமாக வருஷந்தோறும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் நீட் விலக்கு மசோதா குறித்தான அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதேவேளையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நீட் வில்க்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையை விட்டு வெளிநடப்பு செய்தது. அதோடு மட்டுமில்லாமல் அதை விட்டு வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நீட் விலக்கு மசோதா சமூக நீதிக்கு எதிரானது என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் மாணவர்களுக்கு பெரிதாக பாதிப்பு உருவாகும் நீட் தேர்வுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஜனவரி 12ம் தேதியில் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜனவரி 12-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா கூறியுள்ளார்.