Connect with us

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு! தேர்வர்களுக்கு என்னென்ன விதிமுறைகள்?

TNPSC OFFICE

News

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு! தேர்வர்களுக்கு என்னென்ன விதிமுறைகள்?

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு! தேர்வர்களுக்கு என்னென்ன விதிமுறைகள்?

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் இனி அரசு பணியாளர்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சார்நிலைப் பணியில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 22ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத பதிவு செய்திருந்த தேர்வாளர்களின் நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in &  www.tnpscexams.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு எழுத பதிவு செய்த தேர்வாளர்கள் அனைவரும் தங்களது பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வாளர்களுக்கு தேர்வின் போது பல விதிமுறைகள்:

  • விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை எழுதவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. வேறு ஏதேனும் பேனாவினால் எழுதினால் விடைத்தாள்கள் செல்லுபடியாகாது என்றும் கூறியுள்ளது.
  • எந்த தேர்வரும் காலையில் நடைபெறும் தேர்விற்கு 9:15 மணிக்கு பின்னர் தேர்வு அறைக்குள் நுழையவோ 1:15 மணிக்கு முன்னர் தேர்வு அறையில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளது.
  • மாலையில் நடைபெறும் தேர்வுக்கு 2:15 மணிக்கு பின்னர் தேர்வு அறைக்குள் நுழையவோ , 5:15 முன்னர் வரையில் அது வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு கூட அமைந்துள்ள இடத்தை எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டு நுழைவு சீட்டில் QR CODE அச்சிடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி தேர்வு கூடம் இடத்தினை கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • தொலைபேசி போன்ற ஏதேனும் மின்னணு உபகரணங்கள் எடுத்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளின் பத்தி என் 17Aiv குறிப்பிட்டபடி அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பார்கள் ஒப்படைக்க வேண்டும்.
  • சொந்த உடமைகளை பாதுகாப்பாக வைப்பது தேர்வரின் சொந்தப் பொறுப்பில் உட்பட்டதாகவும் என்றும் தெரிவித்துள்ளது.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top