Connect with us

வரும் கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு எப்போது? தேதி அறிவிப்பு;

202201120450192034 For 10th and 12th grade students Diversion as planned Exam SECVPF

தமிழகம்

வரும் கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு எப்போது? தேதி அறிவிப்பு;

தற்போது நம் தமிழகத்தில் நடப்பாண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மே மாதம் முழுவதும் இந்த தேர்வுகள் இருக்கிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப் பட்டுள்ளன.

அதன்படி வரும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதேபோல் 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 19ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆண்டுதோறும் நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top