ரஜினியின் ‘அண்ணாத்த’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகளை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தின் டீஸர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் யூடியூப்பில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நிமிடங்கள் வரை வெளியாகும் இந்த டீஸரில் இந்த படத்தின் நாயகிகளான குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ஆகியோரின் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment