Connect with us

’அண்ணாத்த’ டீசர் ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

annathe 1stlook 1

Entertainment

’அண்ணாத்த’ டீசர் ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

’அண்ணாத்த’ டீசர் ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கிய பிரம்மாண்டமான திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தை வெளியிடுவதற்கான விளம்பர பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

’அண்ணாத்த’ படத்தின் டீசர் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top