’அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற உதயநிதி: ‘எனிமி’ ரிலீஸ் ஆகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வரும் தீபாவளியன்று ’அண்ணாத்த’ தவிர வேறு எந்த படமும் வெளியாக வாய்ப்பில்லை என்று திரையுலக வட்டாரங்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வரும் தீபாவளி அன்று ரஜினியின் ’அண்ணாத்த’ மற்றும் விஷாலின் ’எனிமி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் எனிமி திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என அந்த படத்தின் தயாரிப்பாளர் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் எனிமி திரைப்படத்துக்கு 200 திரையரங்குகளில் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து தமிழகத்தில் ’அண்ணாத்த’ திரைப்படத்திற்கு ஆயிரம் திரையரங்குகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்படுவதால் எனிமி திரைப் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment