‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதியுடன் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளதோடு, இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த பாடல் மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் பாடிய கடைசி பாடல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி மற்றும் எஸ்பிபி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி ரிலீஸா? அல்லது பொங்கல் ரிலீஸா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது நவம்பர் 4, தீபாவளி ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸா? திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார் என்பதும் பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment