நெட்ப்ளிக்ஸில் அண்ணாத்த! சன் நெக்ஸ்ட் இருந்தும் நெட்ப்ளிக்ஸ்க்கு அனுமதி!!

தீபாவளியன்று திரையரங்கில் வெளியானது அண்ணாத்த திரைப்படம். இந்த திரைப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆயினும் வசூல் ரீதியாக நல்லதொரு வரவேற்பு அண்ணாத்த திரைப்படம் பெற்றுள்ளது.

அண்ணாத்த

ஏனென்றால் அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் தற்போது அண்ணாத்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் வெளியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சன் நெக்ஸ்ட் என்ற ஓடிடி இணையதளம் ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் நெட்ப்ளிக்ஸ்ற்கு இன்று நள்ளிரவு முதல் அண்ணாத்த படத்தினை வெளியிட அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று வாரமாக அண்ணாத்த திரைப்படம் பார்க்க திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் புரிந்து கொண்டு வந்த நிலையிலும் கூட நெட்ப்ளிக்ஸ்க்கு அனுமதி கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment