’மாநாடு’ ரிலீஸ் ஆனது ஓடிடியில் ரிலீஸ் ஆன ‘அண்ணாத்த’

சிம்பு நடித ’மாநாடு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில் இன்று முதல் ஓடிடியில் ரஜினியின் ‘அண்ணாத்த’திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சிம்புவின் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதனை அடுத்து ‘அண்ணாத்த’திரைப்படம் பல திரையரங்களில் தூக்கப்பட்டு விட்டதால் சற்று முன் சன் நெக்ஸ்ட் மட்டும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடியில் ‘அண்ணாத்த’படம் ரிலீசாகி உள்ளது

இதனை அடுத்து கனமழை காரணமாக திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது ஓடிடியில் ‘அண்ணாத்த’ படத்தை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment