அண்ணாத்த தியேட்டரில் மட்டும் தான் ரிலீஸ்! இணையதளத்தில் விட தடை!!

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படமானது வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை நயன்தாரா, நடிகை குஷ்பூ, நடிகை மீனா, நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் சூர்யா உள்ளிட்ட ஏராளமான நடிகர் பட்டாளம் உள்ளன.அண்ணாத்த

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளதால் இணையதளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள அண்ணாத்த படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதித்துள்ளது ஹை கோர்ட். சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இணையத்தில் அண்ணாத்த படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார். அண்ணாத்த சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது.

இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 350 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படத்தை இணையதளங்கள் வெளியிட்டு தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment